ஆண் நண்பர்கள் உதவியுடன் கணவரின் தம்பியை கொலை செய்த கைம்பெண்ணுக்கு கிராம மக்கள் செருப்பு மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறி உள்ளது.
சிக்னல் தாண்டா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் 6 ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த நிலையில் சிலருடன் தவறான தொடர்பில் இருந்ததால், கணவரின் சகோதரர் ராஜூவும் அந்த பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளார்.
இதையடுத்து ராஜூவை ஆற்றங்கரைக்கு வரவைத்த அந்த பெண், தனது ஆண் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ராஜூவை அடித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதால், ஊர் மக்கள் அந்த பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்