வீடு, கார், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி இன்று முதல் உயர்த்தியுள்ளது.
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அண்மையில் அடிப்படை 25 புள்ளிகள் உயர்த்தியது.
இதைத் தொடர்ந்து, வீடு, கார், தனிநபர் கடன்களுடன் தொடர்புடைய MCLR வட்டி விகிதத்தை நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இன்று முதல் உயர்த்தியுள்ளது.