புதுச்சேரி பாகூர் அருகே விவசாயி ஒருவர் கூகுள் உதவியுடன், 5 ஆயிரம் ரூபாய் செலவில் தானியங்கி ஒலிப்பெருக்கி அமைத்து, விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் புகுவதை கட்டுப்படுத்தியுள்ளார்.
சோரியாங்குப்பம், குருவிநத்தம், உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல், கரும்பு, வேர்கடலை, காய்கறி வகைகள் உள்ளிட்டவற்றை பயிரிட்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் இவற்றை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த விவசாயி உமாசங்கர் என்பவர், தான் வேர்கடலை சாகுபடி செய்துள்ள நிலத்தில் காட்டுப் பன்றிகளை பயமுறுத்தும் வகையில், யானை, நாய் குறைத்தல், போன்ற ஒலிகளை எழுப்பும் வகையிலான ஒலிப்பெருக்கியை வைத்துள்ளார்.
இதனால் தற்போது காட்டுப் பன்றிகள் வருவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.