டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி தொலைக்காட்சி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அந்த படம் தொடர்பான வீடியோக்களை மத்திய அரசு முடக்கியது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச வரிவிதிப்பு உள்ளிட்டவை குறித்து சோதனை நடைபெறுவதாகவும், சிலரின் செல்போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதேநேரத்தில் பிபிசி அலுவலக அக்கவுண்ட் புத்தகங்களை பரிசோதிக்கவே அதிகாரிகள் சென்றுள்ளதாகவும், இது சோதனை நடவடிக்கை இல்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியுள்ளன.