மனிதர்களின் உடலுக்குள் அறியாமல் செல்லும் மைக்ரோபிளாஸ்டிக் நச்சுத் தன்மையையும், நோய்களையும் ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 5 மில்லி மீட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் துகள்கள் நாம் வாழும் சூழலில் இருப்பதாகவும், கடல்கள், ஆறுகள், மண் மற்றும் மழைகளில் கூட கலந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
காலப்போக்கில் இந்த ரசாயனத்தை மக்கள் வெளியேற்றுவதை விட உள்ளிழுக்கும் போக்கு அதிகரிக்கும் என்றும், இதனால் மனித உடலில் நச்சுத்தன்மை, நோய் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆய்வில், மீன்கள், நன்கொடை செய்யப்படும் ரத்தம் மற்றும் தாய்ப்பாலிலும் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.