ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையை கர்நாடகாவில் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
தும்கூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அதிகளவிலான தளவாடங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் கூறினார்.
இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த ஆலையில் முதற்கட்டமாக இலகுரக ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. 20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் எடை வரை உள்ள ஆயிரம் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த ஆலை மூலம் 6 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.