பிரதமர் மோடியின் எட்டரை ஆண்டு கால ஆட்சி காலத்தில் புதிதாக 73 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
பல்லாவரத்தில் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், விமான போக்குவரத்து துறையைப் பொருத்தவரையில் உலகில் இரண்டாவது உள்நாட்டு பயண போக்குவரத்துக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்றும் சர்வதேச அளவில் பயணிகள் போக்குவரத்தில் ஏழாவது இடத்தில் உள்ளது என்றும் கூறினார்.