2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்கிறார்.
பொருளாதார சவால்களை எதிர்நோக்கிய பட்ஜெட்டாகவும் வளர்ச்சியை இலக்காகக் கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தல், 9 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்தடுத்து வர இருப்பதால் வரிக்குறைப்பு, வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்வு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மக்களைக் கவரும் அறிவிப்புகளும் சலுகைகளும் பட்ஜெட்டில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சமூக நீதித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அதிகமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
பட்ஜெட் சாமான்ய மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.