டெல்லி சர்வேத விமான நிலையத்தில் டிராலி சூட்கேஸ் கைப்பிடியில் மறைத்து கடத்தப்பட்ட 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
டெல்லியில் இருந்து பாங்காக் செல்லும் விமானத்தில் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சந்தேகத்திற்கிடமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில் ஒரு பயணியின் டிராலி சூட் கேஸ் கைப்பிடியில் கத்தை கத்தையாய் நியூசிலாந்து டாலர், யூரோ நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. உரிய அனுமதியின்றி வெளிநாட்டு கரன்சி எடுத்து சென்றதாக அந்த பயணியை, அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.