ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் சாலையில் நின்றுக்கொண்டிருந்த டிப்பர் லாரி மீது, கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சிறுகிரிபாடு கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் 9 பேர், மாட்டுபூரு கிராமத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்வில் பங்கேற்று விட்டு, இன்று அதிகாலை காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
உப்பலபாடு கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்றிருந்த டிப்பர் லாரி மீது, கார் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதில் 4 பேர் பலியான நிலையில், படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு, குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேரிட்டதாக, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.