கேரளாவில் 19 சிறார்களுக்கு அதிகம் தொற்றக்கூடிய நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் அருகே உள்ள காக்கநாடு பகுதியில் மாணவர்கள் சிலரின் பெற்றோர்களுக்கும் தொற்று இருந்ததால், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் இந்த வைரஸ் தாக்கம் காரணமாக வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி ஆகியவை உண்டாகலாம் எனக் குறிப்பிட்டுள்ள மருத்துவர்கள், தாக்கம் அதிகமாக இருந்தால், உடலில் நீரிழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஆரோக்கியமானவர்களுக்கும் இந்தத் தொற்று ஏற்பட்டாலும் சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதன் இணை நோய்களால் தீவிரமாக பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர் மூலம் நோரோ வைரஸ் பரவக்கூடும் என்பதால் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்றவை முதல் அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தொற்றுக்கு ஆளானவர்கள் மற்றவர்களுடன் தொடர்பைத் தவிர்த்துக் கொள்ளும்படியும், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.