மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்குமாறு பகத் சிங் கோஷ்யாரி, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 19-ம் தேதி பிரதமர் மோடி மும்பை வந்தபோது அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலக ஆளுநர் கோஷ்யாரி விருப்பம் தெரிவித்ததாகவும், எஞ்சியுள்ள வாழ்க்கையை எழுதவும், படிக்கவும், சமூக செயல்பாடுகளில் ஈடுபடவும் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.