சட்டக்கல்லூரி விழா ஒன்றில் விருந்தினராக பங்கேற்ற சூரரை போற்று பட நாயகி அபர்னா பாலமுரளியிடம் கல்லூரி மாணவர் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோவை பகிர்ந்துள்ள நடிகை மஞ்சிமா மோகன் இது அறுவெறுப்பானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்
கேரள மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் சூர்யா நடித்த சூரரை போற்று படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி , வினித் ஸ்ரீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேடையில் அமர்ந்திருந்த நடிகை அபர்னாவை வரவேற்பதற்காக கல்லூரி மாணவர் ஒருவர் மேடை ஏறினார். அபர்னாவின் கையில் பூக்களை கொடுத்த அந்த மாணவர் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவரது தோழில் கையை போட்டு வளைத்து பிடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது
நிலைமையை புரிந்து கொண்டு மிரட்சியான அபர்ணா லாவகமாக அந்த விபரீத மாணவரின் பிடியில் இருந்து விலகி தப்பினார்
பலரது முன்னிலையில் அந்த மாணவர் அத்துமீறலில் ஈடுபட்டாலும் மேடையில் இருந்த பேராசிரியர்களில் ஒருவர் கூட அந்த மாணவனை கண்டிக்கவில்லை. மேடையின் கீழிருந்த மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் , மேடையேறி மன்னிப்பு கேட்பது போல
நடித்து மீண்டும் அபர்ணாவின் கையை பிடிக்க முயற்சித்தார். ஆனால் அவர் கையை கொடுக்கவில்லை
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக்கின் மனைவியும் நடிகையுமான மஞ்சிமா மோகன் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சேட்டையில் ஈடுபட்ட மாணவரிடம் விளக்கம் கேட்டு கல்லூரி முதல்வர் பிந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், விளக்கம் அளிக்கவில்லை என்றாலோ, அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லையென்றாலோ நடவடிக்கை நிச்சயம் என்று குறிப்பிட்டுள்ளார்.