பிரதமர் மோடி நாட்டின் 8வது வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை செகந்திரபாத் ரயில் நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு இன்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.
தெலுங்கு பேசும் தெலுங்கானா ஆந்திரா மாநிலங்களை இணைக்கும் ரயில் இது. சென்னை-மைசூர் இடையிலான முதல் வந்தே பாரத் ரயிலை அடுத்து தென் இந்தியாவுக்குக் கிடைத்த இரண்டாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.
சுமார் 700 கிலோமீட்டர் தூரம் இது பயணிக்கிறது.புதிய வந்தே பாரத் ரயிலின் படங்களை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.