கிறிப்டோ கரன்சியை வங்கிகள் கையாளுவதைக் கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த அக்டோபர் முதல் மொத்த கொள்முதலாளர்களுக்கும் பின்னர் சில்லரை வர்த்தகர்களுக்கும் இது பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் கிறிப்டோ கரன்சி சூதாட்டம் போன்றது என்றும் சூதாட்டத்தை அனுமதித்தால் அதற்கான விதிகளுடன்தான் அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
கிறிப்டோ எந்த வகையிலும் நிதியாக இருக்காது என்றும் கூறிய சக்தி கந்ததாஸ் அதற்கு முழுமையாகத் தடை விதிப்பதை வலியுறுத்தினார்.