டெல்லியில் நிலவி வரும் கடும் குளிர் மற்றும் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் அங்கு மாரடைப்பு நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள்,மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தவிர்க்க நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், காலையில் நடைபயிற்சி செய்வதை தவிர்க்கவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
மேலும் குளிர் காலங்களில் பக்கவாத நோயாளிகளின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.