எல்லையில் சுரங்கம் அமைத்து பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுவுவதை தடுக்க, முதன்முறையாக எல்லை பாதுகாப்புப்படையினரால் ரேடார் பொருத்தப்பட்ட டிரோன்கள் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜம்மு பகுதியில் நிலத்தடி சுரங்கப்பாதைகளின் அச்சுறுத்தலை தொழில்நுட்ப ரீதியில் எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக பி.எஸ்.எஃப். மூத்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பயன்படுத்தப்படும் ரேடார்கள் இந்திய தயாரிப்பு என்றும், அவை வலுவான ரேடியோ அலைகளை வெளியிடுவதன் மூலம் பூமிக்கு அடியில் சுரங்கப்பாதைகள் இருப்பதை உறுதிசெய்து, அதன் நீளத்தை வரைபடமாக்க பயன்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.