உத்தரகாண்டின் ஜோஷிமத்தில் கட்டடங்கள் நிலத்தில் புதைந்து வருவதுடன், வீடுகளிலும் விரிசல்கள் விழும் நிலையில், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.
பிரசித்திப்பெற்ற பத்ரிநாத் கோவிலின் வாயில் என்றழைக்கப்படும் ஜோஷிமத் மலை நகரத்தின் வீடுகளிலும், சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டதுடன், அங்குள்ள கோயிலும் இடிந்து விழுந்தது.
இந்நிலையில், அப்பகுதியில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேட்டியளித்த அவர், மக்கள் அனைவரையும் பாதுகாக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், பாதிப்பு தொடர்பாக ஐ.ஐ.டி. ரூர்கி, இஸ்ரோவுடனும் பேசி வருவதாகவும் கூறினார்.