வெளியில் இருந்து உணவுப்பொருட்கள், குளிர்பானங்கள் கொண்டு வருவதை தடைசெய்ய, திரையரங்குகளுக்கு உரிமை உள்ளதாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெளி உணவுகள் கொண்டு செல்வதைத் தடுக்கக்கூடாது என்ற ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, இந்திய திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதன் மீதான விசாரணையில், திரையரங்குகள், அதன் உரிமையாளரின் தனிப்பட்ட சொத்து என்றும், அதில் அவர்கள் நிபந்தனைகளை விதிக்க உரிமை உள்ளதாகவும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.
மேலும், திரையரங்குகளில் சுகாதாரமான குடிநீர் அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு தேவையான உணவுகளை பெற்றோர் கொண்டுவர, அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.