சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து, கடலிலுள்ள இலக்கை தாக்கவல்ல, நீட்டிக்கப்பட்ட திறன்கொண்ட பிரம்மோஸ் ஏவுகணையை, சுகோய் போர் விமானத்திலிருந்து ஏவி, வெற்றிகரமாக சோதித்ததாக, இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
வானிலிருந்து கடலில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய பிரம்மோஸ் ஏவுகணையின், தாக்குதல் தூரத்தை நீட்டித்து, இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் டிஆர்டிஒ ஆகியவை இணைந்து, வங்கக்கடலில் இந்த சோதனை நடத்தின.
அதில், ஏவுகணை இலக்கை தாக்கியதாகவும், இதன்மூலம் நிலம் மற்றும் கடலில் உள்ள தொலைதூர இலக்குகளை துல்லியமாக இந்திய விமானப்படையால் தாக்கமுடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.