இந்தியாவின் வடமாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பனிமூட்டத்துடன் கடுங்குளிர் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. டெல்லியில் இயல்பை விட குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி குறைந்து 5.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள அபு மலைப்பகுதிகளிலும், காஷ்மீரிலும் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழ் குறைந்ததால், கடுங்குளிர் நிலவுகிறது.
பனிமூட்டம் காரணமாக பார்வைத் திறன் குறைந்து பல இடங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், நாளை வரையில் வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.