மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் மாநில அரசுகளுக்கு புதிதாக அனுப்பியுள்ள கடிதத்தில் சுகாதாரம் தொடர்பான வழிகாட்டல்கள் கூறப்பட்டுள்ளன.
அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன், படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர் கருவிகளை போதுமான அளவுக்குகையிருப்பு வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவர்கள் செவிலியர்கள் உள்பட மருத்துவத் துறையினரை தயார் நிலையில் வைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு செலுத்துவதில் கவனம் செலுத்தும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி அனைத்து மருத்துவமனைகளிலும் நாடு தழுவிய ஒத்திகை நடைபெறுவதையொட்டி அது குறித்து மாநில அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.