கொரோனா தொற்றுப்பரவல் உலக நாடுகளிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், இந்தியாவில் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் இந்த தடுப்பு மருந்து, முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள இந்த தடுப்பு மருந்து, இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும், கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பு மருந்தை மூக்கு வழியாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.