மூடிய அறைகளிலும், திரையரங்கம் போன்ற உள் அரங்குகளிலும் முகக்கவசம் கட்டாயம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் மூன்றாவது பூஸ்டர் டோசை 20 சதவீதம் பேர் மட்டுமே செலுத்திக் கொண்டு இருப்பதால் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உருமாறிய கோவிட் பாதிப்பை போல் தெரியவரும் ப்ளூ காய்ச்சல் இருமல் சளி போன்ற அறிகுறிகள் உள்ள அனைத்து நோயாளிகளையும் பரிசோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.