பொறியாளர் ஒருவர் வலியில்லாமல் உயிர்பிரிய வேண்டும் என்பதற்காக, காரை உள்பக்கமாக லாக் செய்து விட்டு, நைட்ரஜன் வாயுவை சிலிண்டர் மூலம் சுவாசித்து உயிரை மாய்த்துக் கொண்ட விபரீத சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. இருதய நோய்க்கு மருத்துவரைப் பார்க்காமல் மரணத்தை நாடிய விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
பெங்களூருவில் மகாலட்சுமி லே-அவுட் பகுதியை சேர்ந்த 51 வயதான வினைகுமார். பொறியாளரான இவர் கடந்த திங்கட்கிழமை மாலை அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் இருக்கும் பூங்கா அருகே தனது போர்டு காரை நிறுத்தி உள்ளார்.
சிறிது நேரம் கழித்து காருக்குள் இருந்து புகை வெளியாகி உள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரின் கதவை உடைத்து திறந்தனர். காரின் பின் இருக்கையில் பிளாஸ்டிக் பையால் முகம் மூடப்பட்டிருந்த நிலையில் வினைகுமார் சடலமாக கிடந்தார் அருகில் சிலிண்டர் ஒன்று இருப்பதையும் கண்டெடுத்தனர். சிலிண்டரில் இருந்து வந்த டியூப்பை வினைக்குமார் தனது வாயில் சொறுகி இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். தனது கணவர் வினைகுமார் இருதய நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக அதீத மன உளைச்சலில் இருந்ததாக அவரது மனைவி தெரிவித்தார். சிலிண்டரை ஆய்வு செய்ததில் அதில் நைட்ரஜன்வாயு நிரப்பப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர்.
இருதய நோயிலிருந்து விடுபட முடியாது என்ற முடிவுக்கு வந்த வினய்குமார் குணப்படுத்த மருத்துவரை நாடாமல் வலிக்காமல் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று கூகுளில் தேடி உள்ளார்.
அதன்படி நைட்ரஜன் சிலிண்டர் ஒன்றை வாங்கி, முகத்தை பிளாஸ்டிக் பையால் சுற்றி சிலிண்டரில் உள்ள டியூப் வழியாக நைட்ரஜன் வாயுவை வாய்க்குள் செலுத்தி சுவாசித்துள்ளார். நைட்ரஜன் வாயுவை சுவாசித்த சில நிமிடங்களில் அவர் உயிரிழந்த நிலையில் நைட்ரஜன் வாயு கார் முழுவதும் பரவி கரும்புகை காருக்குள் இருந்து வெளியே கசிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.