2023-ம் ஆண்டில் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களின் புதிய மாடல் மின்சார இருசக்கர வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
ஹீரோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் AE-8, சுஸுகி நிறுவனத்தின் பர்க்மேன் எலக்ட்ரிக், ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா எலக்ட்ரிக் உள்ளிட்ட பல்வேறு இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது இருசக்கர வாகன சந்தை மின்சார வாகனங்கள் மீது கவனம் செலுத்துவதால் ஏதர், ஓலா, டி.வி.எஸ், பஜாஜ், ஹோண்டா, சுஸுகி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சந்தையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளன.