அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் செக்டார் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவத்தின் 3 பிரிவுகள் பதிலடி கொடுத்துள்ளன.
கடந்த 9-ம் தேதி எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியை கடந்து ஊடுருவிய சீன வீரர்கள் 300-க்கும் மேற்பட்டோர் மீது ஜம்மு காஷ்மீர் ரைபிள்ஸ், ஜாட் ரெஜிமென்ட் மற்றும் சீக்கிய லைட் காலாட்படை உள்ளிட்ட 3 வெவ்வேறு பட்டாலியன்களைச் சேர்ந்த வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலில் இந்திய வீரர்களுக்கு உயிரிழப்புகளோ, கடுமையான காயங்களோ ஏற்படவில்லை எனவும், எந்த அத்துமீறலையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.