மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற மற்றும் புதிய நலத்திட்ட பணிகளை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
நாக்பூர் - பிலாஸ்புர் இடையிலான, நாட்டின் ஆறாவது வந்தே பாரத் ரயிலை, கொடியசைத்துத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சுமார் 8 ஆயிரத்து 650 கோடி ரூபாய் செலவிலான நாக்பூர் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார்.
சுமார் ஆறாயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ள இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர் மோடி, ஃப்ரீடம் பார்க் முதல் காப்ரி வரை மெட்ரோ ரயிலில் பயணித்து, மாணவர்கள், பயணிகளுடனும் கலந்துரையாடினார்.
அதேபோல், 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நாக்பூர் - ஷீரடி இடையிலான 520 கிலோமீட்டர் தூரமுடைய, முதற்கட்ட விரைவு சாலையை திறந்து வைத்த பிரதமர், ஆயிரத்து 575 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
தொடர்ந்து, 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்கள், தேசிய சுகாதார நிறுவனம், நாக் நதி மாசு குறைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.