தெலங்கானாவில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்எஸ் சர்மிளாவை நள்ளிரவு நேரத்தில் மீட்ட போலீஸார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
தெலங்கானாவில் பாதயாத்திரை மேற்கொள்ள சர்மிளாவிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர் ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை காலையில் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தண்ணீர் கூட குடிக்காமல் போராட்டம் நடத்தியதால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.