மாண்டஸ் புயல் காரணமாக பெய்த கனமழையைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
கோவனூர், திம்மமண்டலம், கே.வி.பி புரம் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டது. சத்தியவேடு தொடங்கி காளஹஸ்தி வரை செல்லும் சாலை சேதம் அடைந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அறைகளுக்குத் திரும்ப முடியாமல் மழையில் சிக்கினர். திருப்பதியில் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து குளம் போல காட்சியளித்தது.