மத்திய தரைக்கடலில் படகு பழுதாகி ஆழ்கடலில் தத்தளித்த 164 பேர் இரு வெவ்வேறு நடவடிக்கைகளில் மீட்கப்பட்டனர்.
உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, ஈராக், லிபியா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தோர் ஆபத்தான கடல் பயணம் மூலம் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், லிபியா கடற்கரை பகுதியில் இருந்து ஏராளமான அகதிகளுடன் சென்ற ரப்பர் படகு, கோளாறு ஏற்பட்டு ஆழ்கடலில் தத்தளித்தது. தகவலறிந்து வந்த ஜியோ பேரண்ட்ஸ் தொண்டு நிறுவன மீட்புக் குழுவினர், அவர்களை பத்திரமாக மீட்டனர்.