கேரள மாநிலத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சூர் அடுத்த குன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் சுரேஷ் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த தாய் தந்தையற்ற மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின்படி தலைமறைவாக இருந்த சுரேசை கைது செய்த போலீசார் சிறையிலடைத்தனர்.