மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் XUV700 மற்றும் ஸ்கார்பியோ என் வகை கார்களில் 19 ஆயிரம் வாகனங்களைத் திரும்பப் பெற்றது.
ஜூலை 1 முதல் நவம்பர் 11 வரை உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே இவ்வாறு பரிசோதனைக்காக திரும்பப் பெறப்பட்டுள்ளன.
உற்பத்தியின் போது ஏற்பட்ட சிறு தவறுகளை நீக்குவதற்காக இவை திரும்பப் பெறப்படுவதாக மகிந்திரா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.