தமிழ்நாட்டிலிருந்து செம்மரம் வெட்டுவதற்காக லாரியில் ஆந்திராவுக்கு வந்த கூலித் தொழிலாளர்களை ஆந்திர போலீசார் 10 கிலோமீட்டர் தூரம் ஜீப்பில் விரட்டி சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான கூலித் தொழிலாளர்களை ஆந்திராவுக்கு லாரியில் வந்துகொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் வாகன சோதனையில் நடத்தி, குறிப்பிட்ட லாரியை தடுத்து நிறுத்தியபோது லாரி நிற்காமல் சென்றுள்ளது.
இதனையடுத்து ஜீப்பில் சென்று லாரியை மடக்கிய நிலையில், லாரியிலிருந்து குதித்து தப்பி ஓட முயற்சித்த 40 கூலித் தொழிலாளர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.