டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், 200 கோடி ரூபாய்க்கான கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரை செயலிழக்கச் செய்த ஹேக்கர்கள் மீது மிரட்டி பணம் பறித்தல், இணைய பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளில் கடந்த 25ந் தேதி டெல்லி காவல் துறையின் உளவுப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் சர்வர் செயலிழந்துள்ளதால் அவசரகால வெளிநோயாளிகள், உள்நோயாளிகள்,நோயாளி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.