குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி, அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக குஜராத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
வரும் டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதி இரு கட்டங்களாக குஜராத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதில், மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை, மாணவிகளுக்கு இலவச கல்வி, தீவிரவாத ஆதரவு சக்திகளை கண்டறிய தனித்துறை, விவசாயம் மற்றும் மீன்பிடி துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்பட பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.