வரும் ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது 300 முதல் 400 வரை வந்தே பாரத் ரயில்களை இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
செமி ஹை ஸ்பீடு வகையைச் சேர்ந்த வந்தே பாரத்தின் ரயில் பெட்டிகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 475 வந்தே பாரத் ரயில்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
பயணிகளுக்கு கூடுதலான வசதிகளுடன் பயணத்தை இனிமையாக்க இத்தகைய ரயில் சேவையை அதிகரிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.அனைத்து வந்தே பாரத் ரயில்களும் அகல ரயில் பாதையில் மட்டுமே இயக்கப்படும்.