தலைமைத் தேர்தல் ஆணையர் உள்பட தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையர்கள் நியமனம் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மத்திய அரசுக்கு வலியுறுத்தி இருந்தது. தேர்தல் ஆணையத்துக்கு தனி அதிகாரம் வழங்கும் சட்டத்தை ஏன் அமல்படுத்தவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதற்கு மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தேர்தல் ஆணையர்கள் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையர்கள் தேர்வில் தலைமைத் தேர்தல் ஆணையரை இணைப்பது அரசின் தனிப்பட்ட அதிகாரத்தை பிரிக்கும் செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியற்ற நபர் தேர்வு செய்யப்பட்டால் அந்த உத்தரவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.