குடும்ப அரசியல் மற்றும் ஓட்டு வங்கிக்கான அரசியலை முன்னெடுத்து மக்களை காங்கிரஸ் கட்சி பிளவுப்படுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
குஜராத்தின் மெஹ்சானா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், காங்கிரஸ் மாடல் ஆட்சி குஜராத்தை மட்டுமின்றி, நாட்டையே பாதிப்பிற்குள்ளாகியதால், நாம் தேசத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல கடுமையாக உழைக்க வேண்டியுள்ளதாக கூறினார்.
மேலும், தொலை நோக்குப் பார்வை இருந்தால் மட்டுமே நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.