ரோஜர் மேளா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 71 ஆயிரத்து 56 பேருக்கு அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்கான நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றார்.
மேலும், உற்பத்தி இணைப்பு முன்முயற்சி திட்டத்தின் மூலமாக 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.
ரோஜர் மேளா திட்டத்தின் கீழ் உள்துறை மற்றும் மத்திய காவல் படைகளில் காலியாக உள்ள ஆசிரியர், பேராசிரியர், மருத்துவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 45 இடங்களில் பணி ஆணை வழங்கப்பட்டது.