நுகர்வோர் நலனை பாதுகாக்கும் வகையில், இ-காமர்ஸ் இணையதளங்களில் பதிவேற்றப்படும் போலியான விமர்சனங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத மதிப்பீடுகளுக்கு எதிரான வழிகாட்டுதல்களை விரைவில் மத்திய அரசு வெளியிட உள்ளது.
கொரோனா ஊரடங்கிற்குப் பின் அமேசான், ஃபிளிப்கார்ட், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட தளங்களில் ஆன்லைன் ஷாப்பிங் பெரிதும் அதிகரித்தது.
இதைப் பயன்படுத்தி பல போலி நிறுவனங்களும் கிடுகிடுவென முளைத்தன. தரமற்ற பொருள்களை போலியான ரேட்டிங், ரிவ்யூ வழங்கி விற்பனை செய்வதனால், நம்பி பொருள்களை வாங்கும் மக்களுக்கு நஷ்டமும், ஏமாற்றமும் ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் விதமாக, புதிய இ-காமர்ஸ் விதிமுறைகள் வருகிற 26-ந் தேதி முதல் அமலாகும் என்று நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.