இந்தியாவில் தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவி மின்சாரம் தயாரிப்பது பற்றி சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டு உள்ளது.
இரண்டு மாநில கடற்பகுதிகளிலும் கடற்பகுதியில் வீசும் காற்று 12 முதல் 18 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய காற்றாலைகளை இயக்குவதற்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் இந்த ஆய்வு நடைபெறுவதாக புதுப்பிக்கத் தக்க எரிசக்தி பிரிவுக்கான துணைத் தலைவர் அனில் பாட்டியா கூறி உள்ளார்.
காற் றாலை மூலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்பந்தப் புள்ளிகளை கோரியதை அடுத்து ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவும் திட்டம் பற்றிய ஆய்வு தொடங்கி இருக்கிறது.