மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் ஷாரிக் உடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த மங்களூர் அருகிலுள்ள நாகுரி பகுதியை போலீசார் தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பினரும் விசாரணையை துவங்கியுள்ளனர்.
இதில், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பல முறை சிறைக்கு சென்ற ஷாரிக் வெளியே வந்த பிறகு சில மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார். அவர், கடந்த 2 ஆண்டுகளில் 4 செல்போன் எண்களை பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.