டெல்லியில் இளம் பெண்ணைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய ஆப்தாப்பிடம் இன்று உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது.
அடிக்கடி வாக்குமூலத்தை மாற்றி கூறும் ஆப்தாபிடம் சோதனை நடத்த டெல்லி சாகேத் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து அவனிடம் டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது.
உண்மை கண்டறியும் சோதனையின் போது தடயவியல் குழு நேரில் இருப்பது கட்டாயமாகும். இதனால் தடயவியல் நிபுணர் குழுவிடம் டெல்லி போலீசார் விண்ணப்பித்துள்ளனர்.