மங்களூருவில் ஆட்டோவில் நடந்த வெடி விபத்து தற்செயலானது அல்ல, அது திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் முயற்சி என கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.
நாகுரி என்ற இடத்தில் நேற்று மாலை, சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோவில் மர்ம பொருள் திடீரென வெடித்ததில், ஆட்டோ ஓட்டுநரும், பயணியும் படுகாயமடைந்தனர்.
ஆட்டோவில் இருந்து எரிந்த நிலையில் ஒரு குக்கர் பேட்டரிகளுடன் கண்டெடுக்கப்பட்டதால் தீவிரவாத தாக்குதலா? என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் நடந்துள்ள இச்சம்பவம் குறித்து மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக கர்நாடக டிஜிபி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த ஆட்டோவில் இருந்து பிரேம் ராஜ் என்பவரது அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்திற்கும் பிரேம் ராஜுக்கும் எந்த தொடர்புமில்லை என டிஜிபி தெரிவித்துள்ளார்.