ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 10 ஆயிரம் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ராம குண்டம் பகுதியில் உர ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
தமிழகப் பயணத்தை நிறைவு செய்து நேற்றிரவு விசாகப்பட்டினம் அடைந்த மோடிக்கு விமான நிலையத்தில் இருந்து வழி நெடுக ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தின் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார்.