இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் எல்லன் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவும், இந்தியாவும் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை போராட்டம் மூலம் பெற்றதாக தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம், இந்தியாவுடனான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக கூறிய எல்லன், இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டால், ஜனநாயகத்தின் மூலம் மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.