'The Kerala Story' மலையாளப் படத்தின் டீசர் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், உண்மை வெளியில் வருவதை ஏன் விரும்பவில்லை என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
கேரள மாநிலம் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கேரள காவல்துறையினர் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் வெளியான இதன் டீசரில் 32 ஆயிரம் பெண்கள் மதம் மாற்றப்பட்டதாகவும் அவர்களில் பலர் ஐ.எஸ்.பயிற்சிக்காக சிரியா உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.