குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 5ம் தேதியும், 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், நவம்பர் 10ம் தேதியும் தொடங்குமென்றும், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 15, 18ம் தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிச.8ம் தேதி எண்ணப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தேர்தலில், 4.90 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், இதில் புதிய வாக்காளர்கள் 4.6 லட்சம் பேரும் அடங்குவர் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.