தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் உயரும் வரை மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை மூட வேண்டுமென தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்து உள்ளது.
கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காற்று மாசு காரணமாக இணை நோயுடைய முதியவர்கள், குழந்தைகள் என பலரும் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, காற்று மாசு சீரான நிலையை அடையும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென குழந்தை உரிமைகள் ஆணையத் தலைவர் பிரியங்க் கனூங்கோ, டெல்லி தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.